ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டின் முதல் கொரோனா மரணம் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் டெல்டா வகை கொரோனா வேகமாகப் பரவி வருகிறது.
இதுவரை இல்லாத வகையில் அங்கு ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிட்னி நகரில் வசித்து வந்த 90 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே உயிரிழந்தார்.
இது இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நிகழும் முதல் கொரோனா மரணம் ஆகும்.