ஹேக்கிங் மூலம் முக்கியத் தகவல்களை திருடி மிரட்டல் விடுத்து பல லட்சம் ரூபாய் பணம் பறிக்கும் கும்பலைப் பிடிக்க இன்டர்போல் போலீசார் களமிறங்கியுள்ளனர்.
இன்டர்போல் போலீசை நாடிய பல்வேறு நாடுகள் ஹேக்கிங் கும்பலை வளைக்கும்படி கேட்டுக் கொண்டதையடுத்து, காணொலி மூலம் நடைபெற்ற வருடாந்திர இன்டர்போல் மாநாட்டில் மூத்த அதிகாரிகள் இதற்கான வியூகம் அமைத்துள்ளனர்.
தொழில்நுட்பம் மூலமாகவும் போலீசாரின் இணைப்புச் சங்கிலியைப் போன்ற அடிப்படை ஆற்றலாலும் சைபர் குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிபிஐ அதிகாரிகளும் இதில் இணைந்துள்ளனர். ஹேக்கிங் கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ரஷ்ய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் வலியுறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.