தென்கொரியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று, கழிவறையை பயன்படுத்துவோருக்கு பணம் வழங்கி வருகிறது.
உல்சன் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் (Ulsan National Institute of Science) மனித கழிவுகள் மூலம் பல்கலைக்கழக கட்டடத்திற்கு தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதற்கான பிரத்யேக கழிவறையை பயன்படுத்துவோருக்கு டிஜிட்டல் முறையில் பணம் வழங்கபடுகிறது. மனிதக் கழிவுகள் மீத்தேன் வாயுவாக மாற்றப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.