கொசோவோ நாட்டில் கடும் வெப்பத்திலிருந்து கரடிகளை பாதுகாக்க, அவற்றுக்கு பீர் வழங்கப்படுகிறது.
பிரிஸ்டினா நகருக்கு அருகே உள்ள சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டுவரும் 20 கரடிகளுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பழங்கள் மற்றும் காய்கறிகளும், வாரத்துக்கு 3 முறை இறைச்சியும் வழங்கப்படுகிறது.
மேலும் வெப்பத்தை தணிக்க கரடிகளுக்காக பிரத்யேக நீச்சல் குளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பாளர்கள் பாட்டில் மூலம் வழங்கும் பீரை கரடிகள் உற்சாகமாக பருகும் காட்சிகளும் வெளியாகியுள்ளன