பிரான்சில் கடலில் மிதக்கும் கழிவுகளை அகற்றும் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெல்லிபிஷ்போட் (Jellyfishbot) என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, கடலில் மிதக்கும் கழிவுகள், குப்பைகளை உள்ளிழுத்து, தனக்குள் இருக்கும் பை போன்ற அமைப்பில் சேகரிக்கிறது.
பார்ப்பதற்கு சிறிய படகு போன்று இருக்கும் இந்த ரோபோ முற்றிலும் பேட்டரியால் இயங்கக்கூடியது. காசிஸ் (cassis) நகரிலுள்ள துறைமுகத்தில் மிதக்கும் கழிவுப்பொருட்களை ஜெல்லி பிஷ்போட் சுத்தம் செய்துவருகிறது.