ஹைதி அதிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதி அதிபர் ஜோவ்நெல் மோய்ஸின் வீட்டுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்மநபர்கள், அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொன்றனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என கருதப்பட்ட 4 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், 28 பேர் கொண்ட குழு அதிபரை கொலை செய்ததும், இதில் 26 பேர் கொலம்பியாவையும், 2 பேர் அமெரிக்கர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இவர்களில் 15 கொலம்பியர்களையும், 2 அமெரிக்கர்களையும் கைது செய்த போலீசார் மீதமுள்ளவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.