ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் நடத்தி வரும் யுத்தம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முடிவடையும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் படைகள ஆப்கானில் இருந்து வெளியேறும் நடவடிக்கை ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்து விடும் என்பதை ஜோ பைடன் தெரிவித்தார். ஆப்கானில் ஒரு தேசத்தைக் கட்டமைக்க அமெரிக்கப் படைகள் அனுப்பி வைக்கப்படவில்லை. எதிர்காலத்தில் ஆப்கானை உருவாக்க அந்நாட்டுத் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் ஜோ பைடன் தெரிவித்தார்.ஆப்கான் யுத்தம் வெல்லப்பட முடியாதது என்று கூறிய அவர் இதற்கு ராணுவ ரீதியாகத் தீர்வு காண முடியாது என்றும் கூறினார்.
பல ஆயிரம் அமெரிக்க வீரர்களின் உயிர்களைப் பணயம் வைக்க தாம் விரும்பவில்லை என்றும் ஜோ பைடன் கூறினார்.ஆப்கானில் தாலிபன் கை ஓங்கும் நேரத்தில் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறுவது குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாகவும் அமெரிக்காவின் படைகளைத் திரும்பப்பெறும் முடிவை நியாயப்படுத்துவதாகவும் ஜோ பைடனின் பேச்சு அமைந்தது.