துபையில் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்குக் கப்பல் திடீரென வெடிப்புச் சப்தத்துடன் தீப்பற்றி எரிந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமான துபையில் ஜெபர் அலி துறைமுகம் அமைந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிகப் பெரிய துறைமுகமான இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சரக்குக் கப்பலில் திடீரென வெடிச்சத்தம் கேட்டதாகவும், தொடர்ந்து கப்பல் தீப்பற்றி எரிந்ததாகவும் துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் தகுந்த நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெருப்புப் பற்றிய கப்பல் துறைமுகத்திலிருந்து தூரமாக நிறுத்தப்பட்டுள்ளது.