எகிப்தின் சூயஸ் கால்வாயில் விபத்தில் சிக்கி 100 நாட்களுக்கும் மேலாக சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த எவர் கிவன் கப்பல் அபராதம் செலுத்தியதைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டது.
சுமார் 2 லட்சம் டன் எடை கொண்ட பிரமாண்ட சரக்குக் கப்பலான எவர் கிவன் கடந்த மார்ச் மாதம் சூயஸ் கால்வாயைக் கடக்கும் போது விபத்தில் சிக்கியது. இதனால் கால்வாய் போக்குவரத்து 6 நாட்களுக்கு முற்றிலும் முடங்கிப் போனது. இதனைத் தொடர்ந்து எவர் கிவன் கப்பல் மீட்கப்பட்டாலும், தங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை தராதவரை கப்பலை விடுவிக்க முடியாது என சூயஸ் கால்வாய் ஆணையம் கூறியது.
இதையடுத்து ஜப்பானில் உள்ள கப்பலின் உரிமையாளர்களுடன் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பேச்சுநடத்தப்பட்டது. இறுதியில் 550 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கப்பட்டதையடுத்து கப்பல் விடுவிக்கப்பட்டது.