இந்தோனேஷியாவின் ஜகர்த்தாவில் ஆக்சிஜன் வினியோகிக்கும் மையம் ஒன்றை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது.
கடந்த சில வாரங்களாக டெல்டா வைரஸ் பரவல் காரணமாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அங்கு கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து, கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜகர்த்தாவில் ஆக்சிஜன் வினியோகிக்கும் மையத்தை திறந்துள்ள அந்நாட்டு அரசு, தொழில்துறை பயன்பாட்டில் உள்ள ஆக்சிஜன் அனைத்தையும் மருத்துவ பயன்பாட்டிற்கு திருப்பிவிடவும் திட்டமிட்டுள்ளது.