கொரோனா வைரசுடன் வாழ பிரிட்டன் மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
பிரிட்டனில் வரும் 19 ஆம் தேதியில் இருந்து தளர்வுகளை அளிப்பது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட உள்ள நேரத்தில் இந்த அறிவுறுத்தலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
வரும் 21 ஆம் தேதி முதல் தளர்வுகளை முழுமையாக அறிவிக்க அவர் முன்னதாக திட்டமிட்டிருந்தார். ஆனால் டெல்டா மரபணு மாற்ற வைரசால் அங்கு நோய்பரவல் அதிகரிப்பதை அடுத்து அந்த முடிவை அவர் கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே வெளியே செல்லும் போது விருப்பம் இருந்தால் முககவசம் அணியலாம் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு மருத்துவ நிபுணர்களிடம் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.