எமிரேட்ஸ், கத்தார் விமான நிறுவனங்களுக்குப் போட்டியாக புதிய சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுவனத்தை தொடங்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, சவுதியை 5வது மிகப்பெரிய விமானப் போக்குவரத்து மையமாக மாற்ற புதிய விமான நிறுவனத்தை தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே சவுதியா என்ற விமான நிறுவனத்தை அரசு செயல்படுத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
போட்டி நிறைந்த சூழலில் சவுதி அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தினால், பல ஆண்டுகளுக்கு இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.