மியான்மரில் ராணுவ ஆட்சியை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆங் சாங் சூகியின் ஆதரவு அரசு கலைக்கப்பட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
ஏறத்தாழ 6 மாத காலமாக பொது மக்கள் ராணுவ ஆட்சியைக் கண்டித்து தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிர்களை இழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் யங்கூன் சாலையில் திரண்ட மக்கள் ராணுவ சீருடையை தீயிட்டு கொளுத்தினர். மேலும் மக்களாட்சி அமல்படுத்த வேண்டும் என கோஷமிட்டு வண்ண புகைகளை வெளியிட்டனர்.