பிரிட்டன் இளவரசியான மறைந்த டயானாவின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு லண்டனில் சிலை திறக்கப்பட்டுள்ளது.
1997ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸீல் நடந்த ஒரு கார் விபத்தில் டயானா உயிரிழந்து 23 ஆண்டுகள் கடந்துவிட்டது.
இந்நிலையில் லண்டனில் உள்ள Kensington அரண்மனை தோட்டத்தில் டயானாவின் சிலையை அவரது மகன்களும், இளவரசர்களுமான வில்லியம் மற்றும் ஹாரி இருவரும் திறந்து வைத்தனர்.
கருத்து வேறுபாடு காரணமாக வில்லியமும் - ஹாரியும் பிரிந்திருந்த நிலையில், தங்களின் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்று தங்களது தாயாரின் சிலையைத் திறந்து வைத்து, அவரைப் பற்றி நினைவுக்கூர்ந்தனர்.