பிரிட்டனில் 140 கோடி டாலர்கள் முதலீட்டில் புதிய மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் பேட்டரி உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்கப்போவதாக நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடக்கு இங்கிலாந்தில் உள்ள Sunderlandஇல் இந்த தொழிற்சாலை அமைய உள்ள நிலையில், இதன் மூலம் 6200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.
மேலும் 42 கோடி பவுண்ட் செலவில் முற்றிலும் புதிய எலக்ட்ரிக் கிராஸ்ஒவர் வாகன தயாரிப்பிலும் ஈடுபட உள்ளதாக நிசான் தெரிவித்துள்ளது.
நிசானின் இந்த முடிவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் Boris Johnson, தங்கள் நாட்டின் மீதும் தங்கள் பணியாளர்களின் திறன் மீதும் நிசான் வைத்துள்ள நம்பிக்கையை இந்த முடிவு காட்டுகிறது என்றார்.