பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் டெல்டா வகை தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஒரே வாரத்தில் இருமடங்காக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாறிய டெல்டா வகை வைரஸ், உலக நாடுகளுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.
பிரான்சில் கடந்த வாரம் புதிதாக தொற்று பாதித்தோரில் 9 முதல் 10 சதவீதம் பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பிருந்ததாக மதிப்பிடப்பட்ட நிலையில், இந்த வாரம் அது 20 சதவீதம் பேருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் Olivier Veran தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஒரு வாரத்தில் மட்டும் டெல்டா தொற்று பாதிப்பு இருமடங்காக அதிகரித்திருப்பதாக ஜெர்மனியும் தெரிவித்துள்ளது.