அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஆங்கில வார்த்தை உச்சரிப்பு போட்டியில் பங்கேற்கும் 11 இறுதி போட்டியாளர்களில் 9 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் ஆங்கில வார்த்தை உச்சரிப்பு போட்டி நடைபெற்றுவரும் நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பரவலால் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஆங்கில வார்த்தை உச்சரிப்பு போட்டி, புளோரிடா மாகாணத்தில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட் ரிசார்ட்டில் ஜூலை மாதம் 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது.