அஸ்ட்ராஜெனகா இரண்டு டோஸ் தடுப்பூசி 8 முதல் 12 வார கால அளவில் செலுத்துவதை விட 44 முதல் 45 வார கால அளவில் செலுத்தும் போது 4 மடங்கு ஆன்ட்டிபாடி எதிர்ப்பு சக்தியை பெருக்குவதாக ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.
அஸ்ட்ராஜெனகா இரண்டு டோஸ் தடுப்பூசி 8 முதல் 12 வார இடைவெளியில் செலுத்திக் கொண்டவர்களை காட்டிலும், 15 முதல் 25 வார கால அளவில் செலுத்திக் கொண்டவர்களுக்கு அதிக எதிர்ப்பு சக்தி பெருக்கும் திறன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் தடுப்பூசியின் கால இடைவெளியை ஓராண்டாக பிரித்து 3 டோஸ் அளவாக தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்ட போது எதிர்ப்பு சக்தி திறன் கூடுதலாக பெருகுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.