ரஷ்யாவில் தினசரி கொரோனா உயிரிழப்புகள் புதிய உச்சத்தை எட்டியதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 611 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், 21,650 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.
தலைநகர் மாஸ்கோவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 124 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் மக்கள் கூடும் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தேநீர் விடுதிகள் மற்றும் உணவகங்களில் கூட தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.