அமெரிக்காவின் பிரம்மாண்ட இ காமர்ஸ் நிறுவனங்கள் இந்திய விதிகளை மீறி, மக்களை கொள்ளையடிக்கும் அளவுக்கு அதிக விலைக்கு பொருள்களை விற்கின்றன என வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டி உள்ளார்.
காணொளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு கூறிய அவர், இந்த நிறுவனங்கள் தங்களிடம் உள்ள பணம் மற்றும் இதர பலங்களை பயன்படுத்தி, சிறிய சிறிய கடைகளை அழித்து வருவதாக கூறினார்.
பல பன்னாட்டு இ காமர்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்தாலும், அமெரிக்க நிறுவனங்கள் இந்திய விதிகளை மீறுவதில் மூர்க்கத்தனமாக உள்ளன என்றார் அவர்.
எந்தெந்த அமெரிக்க இ காமர்ஸ் நிறுவனங்கள் என வெளிப்படையாக கூறா விட்டாலும், பியூஷ் கோயல் அமேசான், வால்மார்ட் போன்றவற்றை குறிப்பிட்டே இவ்வாறு கூறியுள்ளதாக கருதப்படுகிறது.