செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கிய சீன விண்கலத்தின் செயல்பாடுகள் அடங்கிய 3 வீடியோ காட்சிகளை சீன விண்வெளி ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய சீனா அனுப்பிய Zhurong என்ற ரோவர் விண்கலம் மே மாதம் செவ்வாயில் தரை இறங்கியது. 240கிலோ எடை கொண்ட இந்த விண்கலம் உயரத்தில் உள்ள படங்களை எடுப்பதுடன், வழி செலுத்தும் வகையிலான காமிராக்களையும் கொண்டுள்ளது.
இந்த நிலையில் செவ்வாயில் தரை இறங்கிய விண்கலம் குறித்த 3 வீடியோக்களை சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.