கோவேக்சின் தடுப்பூசி எதையும் பிரேசில் அரசு வாங்கவில்லை என்றும் அதற்காக ஒப்பந்தம் போடப்பட்டு நிதி முறைகேடு நடந்ததாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை எனவும் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோநாரோ தெரிவித்துள்ளார்.
ஃபைசர் நிறுவனம் குறைந்த விலைக்கு தடுப்பூசி தருவதாக கூறியதை நிராகரித்து விட்டு, பாரத் பயோடெக்கிடம் இருந்து கோவேக்சினை வாங்க பிரேசில் அரசு அவசரகதியில் ஒப்பந்தம் போட்டதாக புகார் எழுந்து, அதை அங்குள்ள போலீசாரும், செனட் சிறப்பு கமிட்டியும் விசாரிக்கின்றன.
பிரேசிலில், மத்திய சுகாதார ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற தடுப்பூசிகளை மட்டுமே வாங்க வேண்டும் என்ற விதி இருக்கும் போது, அந்த ஒப்புதலை பெறாத கோவேக்சினை வாங்கியதாக கூறுவது தவறு எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பாரத் பயோடெக்கின் கூட்டு நிறுவனம் ஒன்று பிரேசிலில் இப்போது கோவேக்சினின் 3 ஆம் கட்ட சோதனைகளை நடத்தி வருகிறது.