மெக்சிகோ மற்றும் அமெரிக்க எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
ரெய்னோசா நகரில், வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. இதில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், வன்முறை கும்பலை சேர்ந்த நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.