லண்டனில் பொது முடக்கத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் போலீசார் மற்றும் பொது மக்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
அங்கு டெல்டா வகை கொரோனா பரவ தொடங்கியதை அடுத்து போரீஸ் ஜான்சன் அரசு ஜூலை 19-ஆம் தேதி ஊரடங்கை நீட்டித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் கலவரத்தில் முடிய பொது மக்கள் மற்றும் போலீசார் சாலைகளில் கட்டி புரண்டு சண்டையிட்டனர். மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசார் மீது டென்னிஸ் பந்துகளை ஏறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்