ஈரானின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்ராஹிம் ரைசிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும், ஈரானுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய அதிபருடன் சேர்ந்து செயலாற்ற உள்ளதாக டுவிட்டரில் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், மொத்தம் பதிவான 48.8 சதவிகிதம் வாக்குகளில், 61.95 சதவிகித வாக்குகளை இப்ராஹிம் ரைசி பெற்றார்.
ஈரானின் தலைமை நீதிபதியாக இருந்த 60 வயதான இப்ராஹிம் ரைசி வரும் ஆகஸட் மாதம் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.