தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் கண்டெடுக்கப்பட்ட வைரம், உலகிலேயே மூன்றாவது பெரிய வைரமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
2 வாரங்களுக்கு முன் கண்டு பிடிக்கப்பட்ட வைரத்தை அந்த நாட்டின் அதிபர் மோக்விட்சி கையில் வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
1098 காரட் கொண்ட வைரத்தை அரசு மற்றும் டிபியர்ஸ் நிறுவனம் இணைந்து கண்டுபிடித்துள்ளது. இந்த வைரம் 73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லி மீட்டர் தடிமனுடன் காணப்படுகிறது.
இதன் விலை மற்றும் விற்பது குறித்து இன்னும் அரசு தரப்பில் முடிவு எடுக்கப்படவில்லை. உலகின் 2வது பெரிய வைரமான லெஸ்டி லா ரானா 2015 ஆம் ஆண்டு போட்ஸ்வானாவில் தான் கண்டெடுக்கப்பட்டது.
போட்ஸ்வானா நாட்டின் 80 சதவீத வருமானம் அரசுக்கு சொந்தமான டெப்ஸ்வானா வைர சுரங்க நிறுவனம் மூலம் கிடைக்கிறது.