8 முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான மூக்கில் ஸ்பிரே வடிவில் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து சோதனை நடந்து வருவதாகவும், இந்த மருந்து வரும் செப்டம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் தயாராகி விடும் எனவும் ரஷ்ய காமாலயா (Gamaleya) மருந்து ஆய்வு நிறுவன தலைவர் அலக்சாண்டர் ஜின்ட்ஸ்பர்க் (Alexander Gintsburg) தெரிவித்துள்ளார்.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியில் உள்ள அதே மருந்து தான் இந்த மூக்கு வழியே செலுத்தும் மருந்திலும் உள்ளது. ஆனால் ஊசிக்குப் பதிலாக மூக்கிற்குள் செலுத்தக்கூடிய நேசல் ஒன்று அதில் இருக்கும். இந்த சோதனையில், நேசல் தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட சிறார்களிடம், காய்ச்சல் உள்ளிட்ட எந்தவிதமான எதிர்விளைவுகளும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.