50 கோடி பைசர் கொரோனா தடுப்பூசிகளை அமெரிக்கா விலை கொடுத்து வாங்க உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இவற்றை 92 ஏழை மற்றும் வளர்ந்து வரும் உலக நாடுகளுக்கு இலவசமாக விநியோகிக்க இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நடவடிக்கை பல லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காக்கும் என்றும் லண்டனில் இருந்து ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா பயன்படுத்தாத தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி இந்த மாத இறுதிக்குள் 8 கோடி தடுப்பூசிகளை கோவேக்ஸ் திட்டத்துக்கு அமெரிக்கா வழங்கும். இந்த தடுப்பூசியில் ஒரு கணிசமான பங்கு இந்தியாவுக்கும் கிடைக்க உள்ளது.