உலக நாடுகளுக்கு 50 கோடி கொரோனா தொற்று தடுப்பூசியை இலவசமாக வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
பெருந்தொற்று பரவத் தொடங்கியதும் உலகம் முழுவதும் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான நாடுகள், வளர்ந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்தன. இந்நிலையில் அமெரிக்காவில் பாதிப் பேருக்கும் மேல் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் அங்கு கொரோனாவின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது.
இதையடுத்து ஃபைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியை உலக நாடுகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார். இதற்கான முறையான அறிவிப்பை நாளை நடைபெற உள்ள ஜி 7 நாடுகளின் உச்சி மாநட்டில் அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.