அல் கொய்தா அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் மறைந்திருக்கலாம் என ஐநா சபை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடந்த வெள்ளிக் கிழமை வெளியான அறிக்கையில், அல் கொய்தா அமைப்புடன் சில வெளிநாட்டு தீவிரவாதிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ளதாகவும், இந்த அமைப்பின் தலைவரான அய்மான் அல் ஜவாஹிரி உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இறந்து போனதாக முன்னர் கூறப்பட்ட தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அல் கொய்தா அமைப்பின் தலைவர்கள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றத்தைக் குறைத்துக் கொண்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.