கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்து உருவானது என தாம் கூறியது சரி என, தற்போது தமது எதிரிகள் கூட சொல்லத் தொடங்கியிருப்பதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகராக உள்ள, டாக்டர் ஃபாசியின் (Dr Fauci) முந்தைய மின்னஞ்சல்கள் வெளியே கசிந்ததையும், அதில் வூகான் ஆய்வகத்தில் வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதாக விவாதிக்கப்பட்டிருப்பதையும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா வைரசால் ஏற்பட்ட அழிவு மற்றும் உயிரிழப்புகளுக்காக சீனா அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்கும் 10 டிரில்லியன் டாலர்கள் நட்டஈடு கொடுக்க வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.