அமெரிக்காவில் சிக்கடா எனப்படும் பூச்சிகளை வறுத்தும் பொரித்தும் சுவை மிகுந்த உணவு வகைகளைத் தயாரித்து மக்கள் உண்டு வரும் சூழலில், கடலுணவு ஒவ்வாமை உள்ளவர்கள் அதை உண்ண வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது.
சிக்கடா எனப்படும் பூச்சியினம் மண்ணுக்குள்ளே முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து 17 ஆண்டுகளுக்கு ஒருமுறை புற்றீசல்போலக் கோடிக்கணக்கில் வெளிப்படுகிறது. இவற்றை மொத்தமாக அள்ளிச்சென்று வறுத்தும், பொரித்தும் பல்வேறு உணவு வகைகளைத் தயாரித்து மக்கள் உண்டு வருகின்றனர்.
இந்தப் பூச்சிகள் கடலில் உள்ள இறால் வகைகளைச் சேர்ந்தவை என்பதால் கடலுணவு ஒவ்வாமை உள்ளவர்கள் இவற்றை உண்ண வேண்டாம் என உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை எச்சரித்துள்ளது.