இணையதள தாக்குதலை தொடர்ந்து ஒரு நாள் முடங்கிய உலகின் மிகப்பெரிய இறைச்சி உற்பத்தியாளரான JBS SA நிறுவனம் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளது.
ரஷ்ய கிரிமினல்களுடன் தொடர்புடைய ஹேக்கர்கள் நடத்திய இந்த தாக்குதல் காரணமாக வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இறைச்சி உற்பத்தி பாதிக்கப்பட்டது.
அமெரிக்காவில் 20 சதவிகித இறைச்சி தயாரிப்பை பிரேசிலுக்கு சொந்தமான JBS நிறுவனம் நடத்துகிறது. சென்ற மாதம் அமெரிக்காவின் கலோனியல் பைப்லைன் மீது நடந்த சைபர் தாக்குதலால், எண்ணெய் விநியோகம் தடைபட்டு, பெட்ரோல் விலை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ரஷ்ய தொடர்புடைய ஹேக்கர்களால் நடத்தப்படும் 3 ஆவது சைபர் தாக்குதல் இது என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி தெரிவித்துள்ளார்.