மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் அதிபர், பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சரை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது.
அந்நாட்டில் அமைச்சரவை மறுசீரமைப்பின் பின்னர் நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் அதிபராக பா தேவ் இருந்து வருகிறார். பிரதமராக முக்தார் குவானியும், பாதுகாப்புத்துறை அமைச்சராக சொலிமேன் டவ்கரே ஆகியோர் இருந்து வருகின்றனர்.
அமைச்சரவை மறுசீரமைப்புக் கூட்டத்திற்கு பின் ராணுவத் தொடர்பு கொண்ட இருவர் நீக்கப்பட்டனர். இதையடுத்து அதிபர் மாளிகைக்குள் புகுந்த ராணுவம் அவரைக் கைது செய்தது. தொடர்ந்து பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சரும் கைது செய்யப்பட்டனர்.