சீனாவின் வூகான் பகுதியில் இருந்துதான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அது தொடர்பாக அமெரிக்க எம்பிக்களின் விசாரணை அறிக்கை அமெரிக்க அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சீனா விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தட்டிக் கழிப்பதாக அந்த அறிக்கை சாடியுள்ளது. 21 பக்க அறிக்கையின் விவரங்கள் வெளியே கசிந்துள்ளன. வூகானில் தொற்று நோய்கள் தொடர்பான ஆபத்தான பரிசோதனைகள் நடைபெறுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்கா பல ஆண்டுகளாக கூறி வரும் எச்சரிக்கைகளையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.சீனாவின் ஆய்வுக்கூடங்களில் ராணுவம் நிறுத்தப்பட்டிருப்பதும் ஆபத்தான பரிசோதனைகள் நடைபெறுவதை உறுதி செய்திருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
டாக்டர் ஆன்டனி ஃபாவ்சி தலைமையிலான அமெரிக்க நிறுவனம் அளித்த நிதியுதவியுடன் சீனாவில் கொரோனா வைரஸ் ஆய்வுகள் நடைபெற்றதாகவும் இதனை ஆய்வு செய்ய அமெரிக்க நிபுணர்கள் அடிக்கடி சீனாவின் ஆய்வுக்கூடங்களுக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.