கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டிசிவர் நீக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
பிளாஸ்மா தெரபி, ஹைட்ராக்சி குளோரோகின் ஆகியவை கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையில் பலனளிக்கவில்லை என்று கைவிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டிசிவரை கைவிட முடிவு செய்துள்ளது.
இந்திய அரசு ரெம்டிசிவர் மருந்து உற்பத்தியை அதிகரிக்க 38 கூடுதலான உற்பத்திக் கூடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கை வெளியாகியுள்ளது.