ஃபைசரின் தடுப்பூசியை ஒரு மாத காலம் வரை சாதாரண பிரிட்ஜ்களில் வைத்து பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஃபைசர் நிறுவனம் தாக்கல் செய்த தரவுகளின் அடிப்படையில், 2 முதல் 8 டிகிரி செல்சியஷஸ் வெப்பநிலையில் வைத்துக் கொள்ளலாம் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையான FDA தெரிவித்துள்ளது.
இந்த அனுமதியால், தடுப்பூசி விநியோகம் விரைவு படுத்தப்படுவதுடன், அமெரிக்க மக்கள் பரவலாக இந்த தடுப்பூசியை சமூக மருத்துவ அலுவலகங்கள் வாயிலாக போட்டுக்கொள்ள இயலும் என FDA இயக்குநர் பீட்டர் மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய மருந்து முகமையும் கடந்த திங்களன்று இது போன்ற அனுமதியை வழங்கியது. ஃபைசரின் தடுப்பூசியை முதலில் மைனஸ் 80 முதல் 60 டிகிரி வெப்பத்தில் வைக்க வேண்டும் என்ற விதி, பின்னர் மருந்தகங்களில் உள்ள பிரிட்ஜ்களில் 2 வாரம் வரை வைக்கலாம் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.