மிகவும் ஆபத்தான மரபணு மாற்ற வைரஸ் சிங்கப்பூரில் பரவுகிறது என்ற டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியதை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.
இப்படி ஒரு வைரஸ் சிங்கப்பூரில் பரவுவதாகவும், அதன் மூலம் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை உருவாகும் எனவும் கெஜ்ரிவால் டுவிட் செய்திருந்தார்.
இதை மறுத்துள்ள சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம்,சிங்கப்பூர் மரபணு மாற்ற வைரஸ் என்று எதுவும் இல்லை என்றும், தற்போது சிங்கப்பூரில் காணப்படுவது இந்தியாவின் காணப்பட்ட B.1.617.2 வைரஸ் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது.