தடுப்பூசி காப்புரிமை விதிகளில் தளர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஆதரிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
கொரோனாவை ஒழிக்க வளரும் நாடுகள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் சீனா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வளரும் நாடுகளின் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி எளிதாக கிடைக்க வேண்டுமானால், அதன் காப்புரிமை மீது தற்காலிக தளர்வுகளை அளிக்க வேண்டும் என கடந்த அக்டோபரில், உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் கேட்டுக் கொண்டன.
அதற்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இப்போது சீனாவும் இந்தியாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் ஆதரவு வழங்கி உள்ளது.