சீன நிறுவனங்களின் பங்களிப்பு இன்றி 5ஜி தொலைத்தொடர்பு சோதனை நடத்துவது இந்தியாவின் இறையாண்மை மிக்க முடிவு என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 5ஜி சேவைக்கான சோதனையைச் சீன நிறுவனங்களின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு இன்றி நடத்த ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்களுக்குத் தொலைத்தொடர்புத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இதை வரவேற்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், இந்தியாவின் செயல் இறையாண்மை மிக்க நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹுவேய், இசட் டி இ நிறுவனங்களின் வலையமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்துவது தேசியப் பாதுகாப்புக்கும், தொலைத்தொடர்பு உட்கட்டமைப்புக்கும், வாடிக்கையாளர்களின் தனியுரிமைக்கும், மனித உரிமைக்கும் அச்சுறுத்தல் என அவர் தெரிவித்தார்.