தற்போது இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் வகையானது அதிக அளவில் தொற்று பரவலை ஏற்படுத்தக்கூடியது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்த அவர், இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா தொற்றும், அதன் பாதிப்பும் பலவகைகளாக உள்ளது என்றார்.
மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அதனால் கொரோனா பாதிப்பின் தீவிரத்தை குறைக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
இரட்டை மரபணு மாற்ற வைரசில், பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்க வகை மரபுக்கூறுகள் காணப்படுவதாக கூறிய சவுமியா சுவாமிநாதன், இந்த வைரஸ் உடலின் நோய் எதிர்ப்புத் திறனில் இருந்து தப்பிக்கும் சக்தி வாய்ந்தது என்றும் தெரிவித்தார்.