செவ்வாய் கிரகத்தில் இன்ஜினியூட்டி ஹெலிகாப்டர் பறக்கும் சப்தத்தை நாசா முதன்முறையாக வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய பெர்ஸிவரன்ஸ் என்ற ஆய்வூர்தியை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த ஆண்டு அனுப்பியது.
அதனுடன் இன்ஜினியூட்டி எனப்படும் குட்டி ஹெலிகாப்டரையும் இணைத்து அதன் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஹெலிகாப்டரை மீண்டும் பறக்க வைத்து நாசா முயற்சி மேற்கொண்டது. அப்போது 2 நிமிடங்களில் 872 அடி தூரம் பறந்து இன்ஜினியூட்டி சாதனை படைத்தது.
ஹெலிகாப்டர் புறப்படும் போது அதன் இறக்கைகள் சுழலும் சப்தத்தையும் நாசா பதிவு செய்து தற்போது வெளியிட்டுள்ளது.
வேறு கிரகத்தில் மற்றொரு விண்கலத்தின் சப்தத்தை பதிவு செய்தது இதுவே முதன் முறை என நாசா பெருமையுடன் தெரிவித்துள்ளது.