ஆப்கானிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 40 விழுக்காடு அளவிற்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த 2016ம் ஆண்டுக்கும் 2020ம் ஆண்டுக்கும் இடையே பொதுமக்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 ஆயிரத்து 977 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் ஆயிரத்து 600 பேர் குழந்தைகள் எனவும் சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 14 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு நாளும் ஐந்து குழந்தைகள் வரை கொல்லப்படுவதாகவும் அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.