கொரோனா பரவலை முறையாக கையாளாததால் கலிபோர்னியா ஆளுநரை திரும்ப பெறுவதற்கான பொது வாக்கெடுப்பு பிரச்சாரத்திற்கு குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் ஜான் காக்ஸ் 500 கிலோ எடை கொண்ட கரடியுடன் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த டேக்(tag) என்ற 500 கிலோ கரடியை சேக்ரமெண்டோ நகரில்(Sacramento) நடந்த பிரச்சார கூட்டத்திற்கு அழைத்துவந்த ஜான் காக்ஸ், கலிபோர்னியாவின் முன்னேற்றத்துக்கு மிருகதனமான மாற்றங்கள் தேவை என்றும், தான் ஆளுநரானால் வரிகளை குறைத்து அனைத்து பொருட்களையும் மலிவாக்குவேன் என்றும் தெரிவித்தார்.
ஜான் காக்ஸின் பிரச்சாரம் முடியும் வரை டேக் தனக்கு கிடைத்த தின்பண்டங்களை ருசித்தபடி, அமைதியாக அமர்ந்திருந்தது.