ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் எஸ் என் 15 ரக விண்வெளிஓடம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு மீண்டும் தரையிறக்கப்பட்டது.
நிலவு மற்றும் செவ்வாய்க்கு மனிதர்கள் மற்றும் 100 டன் எடை கொண்ட சரக்குகளை கொண்டு செல்லும் விண்கலத்தை உருவாக்கும் திட்டத்தில் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மும்முரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் விண்கலத்தின் சோதனை ஓட்டம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்டது.
வெற்றிகரமாக சுற்றுப்பாதையை அடைந்த விண்கலம், மீண்டும் தரையிறக்கப்பட்டது. கடந்த 2 சோதனை ஓட்டத்தின்போது விண்கலம் வெடித்து சிதறிய நிலையில் தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு தரையிறக்கப்பட்டுள்ளது.