கனேரி தீவுகள் பகுதியில் கடலில் தத்தளித்த 48 அகதிகளை ஸ்பெயின் கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.
கிரேன் கனேரியாவில் இருந்து 30 மைல் தூரத்தில் கடலில் தத்தளித்த 3 குழந்தைகள், 18 பெண்கள் உள்பட 42 பேரை மீட்டு Arguineguin துறைமுக முகாமில் தங்க வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
முன்னதாக கடந்த திங்கட்கிழமை இதேபோல் கடலில் தத்தளித்த 16 அகதிகளை கடற்பகுதி அதிகாரிகள் மீட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒருவருக்கு ஹைபோதெர்மியா (hypothermia) இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் உடனடியாக மருத்துவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.