மேற்கு ஆசிய நாடான லெபனானில், ஒரே நேரத்தில் டன் கணக்கில் மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளது.
Qaraoun என்ற நகரில் உள்ள Litani என்ற ஏரி அண்மைக்காலமாக மாசு காரணமாக பெரிதும் பாழ்பட்டு, சீரழிந்துள்ளது.
குப்பை -கூளங்கள் ஏரியில் கொட்டப்பட்டதால், ஏரி தண்ணீர் மாசடைந்து விட்டது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் 40டன் மீன்கள் செத்து, கரை ஒதுங்கின.
இவ்வாரு, மீன்கள் செத்து கரை ஒதுங்குவதால் அதிர்ச்சி அடைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு, லெபனான் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.