ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், நகர்ப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அந்நகர் முப்பரிமாண வடிவ மினியேச்சராக உருவாக்கப்பட்டுள்ளது.
மோரி என்ற கட்டுமான நிறுவனமானது, டோக்கியோ நகரிலுள்ள வானுயர் கட்டடங்கள், சிறுசிறு கடைகள், தெருக்கள், ரயில்பாதை, கடற்பகுதி உள்ளிட்ட அனைத்தையும் முப்பரிமாண வடிவில் உருவாக்கியுள்ளது.
230 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மினியேச்சர் சிட்டி, பேரழிவு தடுப்பு, நகர்புற மேம்பாட்டை திட்டமிடுதல், தனியார் டெவலப்பர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் என மோரி நிறுவனம் தெரிவித்துள்ளது.