ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தில் சளியை உண்டாக்கும் வைரஸ் இருப்பதாக பிரேசில் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளதை ரஷ்ய நிறுவனம் மறுத்துள்ளது.
ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை ஆய்வு செய்த பிரேசில் அறிவியலாளர்கள், அதில் சளியை உண்டாக்கும் வைரஸ் உள்ளதாகக் கூறி இறக்குமதிக்குத் தடை விதிக்கப் பரிந்துரைத்துள்ளனர்.
இந்த மருந்தைத் தயாரித்துள்ள ரஷ்யாவின் காமாலேயா நிறுவனம் இதை மறுத்துள்ளது. ஸ்புட்னிக் தடுப்பு மருந்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அடினோவைரஸ் சளியையும் லேசான சுவாசக் கோளாறையும் உண்டாக்கும்.
இந்த வைரஸ் மரபணு மாற்றப்பட்டுள்ளதால் அந்தப் பண்பைக் கொண்டிருப்பதில்லை.
கொரோனா வைரசைப் போன்ற புரதக் குவிப்பை உருவாக்க இது பயன்படுத்தப்படுகிறது. உண்மையான கொரோனா வைரஸ் தொற்றினால் அதை எதிர்கொண்டு சமாளிக்க மனித உடலமைப்பைத் தயார்படுத்தும்.
மரபணு மாற்றப்பட்ட வைரசுக்குப் பதில் உண்மையான வைரஸ் உள்ளதாக பிரேசில் கூறியிருந்த நிலையில், ரஷ்ய நிறுவனம் அதை மறுத்துள்ளது.