அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள லிங்கன் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தால் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.
நியூ மெக்சிகோ மலைப்பகுதியில் கடந்த 26 ஆம் தேதி ஏற்பட்ட தீ, இதுவரை 6 ஆயிரத்து 100 ஏக்கர் அளவுக்கு பரவியுள்ளது.
இதில், இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில், ஏர் டேங்கர் கொண்ட ஹெலிகாப்டர் தீயணைப்பு பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தீ பரவியது எப்படி என விசாரணை நடைபெற்று வருகிறது.